1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. gen z workers are pretending work is not over

வேலை முடிந்தாலும் வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z இளைஞர்கள்!.. ஆய்வில் கண்டுபிடிப்பு..

gen z
இப்போதுள்ள இளம் தலைமுறைகள் நல்ல அறிவாற்றலோடு இருக்கிறார்கள்.. அதேநேரம் உடல் ஆரோக்கியமும், ஒரிடத்தில் பணி செய்யும்போது அதற்கான கடமையுணர்ச்சியோ, நேர்மையோ இல்லாமல் இருக்கிறார்கள் என பரவலாக பேசப்படுகிறது.

குறிப்பாக முன்பிருந்தது போல ஊழியர்களிடம் கடமையுணர்ச்சி, பொறுப்புணர்ச்சி மற்றும் உண்மைத் தன்மை ஆகியவை இப்போதுள்ள     Gen Z ஊழியர்களிடம் இல்லை என பல கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதை நிரூபிப்பது போல தற்போது ஒரு உண்மை ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது..

80 சதவீத Gen Z ஊழியர்கள் வேலையை முடித்தாலும் வேலை செய்வது போல் நடிப்பதாக Sofware Finder என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வேலையை முடித்த பின்னர் கம்ப்யூட்டர் மவுசை கிளிக் செய்து கொண்டே இருப்பது, மெசேஜ்களுக்கு தாமதாக பதில் அனுப்புவது, தேவையற்ற Tap-களை திறந்து வைப்பது, தனக்கு பிடித்த விஷயங்களை தேடுவது என பொழுது போக்குவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

வேலை செய்யாமல் இருக்கிறோம் என மேனேஜருக்கு தெரியக்கூடாது என்பதற்காகவும், வேலை முடிந்துவிட்டது என தெரிந்தால் மேலும் சில வேலைகளை கொடுத்துவிடுவார்கள் என்பதற்காகவும் அவர்கள் வேலை முடிந்தாலும் முடியாதது போலவே காட்டிக்கொள்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்