செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (07:51 IST)

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு: கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

bank
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதை அடுத்து வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஐந்து நாட்கள் மட்டுமே வேலை மற்றும் ஓய்வூதியம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வங்கி ஊழியர்கள் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக ஜூன் 27 முதல் வங்கிகள் செயல்பட வாய்ப்பில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் சுதாரித்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து வங்கி ஊழியர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது