1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 மே 2022 (14:16 IST)

தனியார்மயமாகும் இரண்டு பொதுத்துறை வங்கிகள்!

banks
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் இயங்கிவரும் 4 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முதலில் திட்டமிடப்பட்டது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா  ஆகிய நான்கு வங்கிகள் முதல்கட்டமாக தனியார்மயமாக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை மட்டும் முதல்கட்டமாக தனியார் மயமாக்கப்பட்ட உள்ளதாகவும் இதனை அடுத்து சில ஆண்டுகள் கழித்து மேலும் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படுவதாக கூறப்படுவதால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு