திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (16:37 IST)

நவம்பர் மாதம் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் - பிரதமர் மோடி உரை…

இந்தியாவில் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4 வது கட்ட ஊரடங்கு ஜூன் 30 இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூலை வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தற்போது உரையாற்றினார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது :

சரியான நேரத்தில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளதால லட்சக்கணக்காக உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போது நாம் எதாவது தவறுகள் செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்னும் சில இடங்களில் நாம் கொரொனா விலகலை நாம் கையளவில்லை;  அரசி விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என எச்சரித்துள்ளார்.

நாட்டு மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. கொரொனா விதிமீறலுக்காம்க ஒரு பிரதமரிடம் ரூ.13 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் 31 ஆயிரம் கோடி பண உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 81 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.  வரும் நவம்பர்மாதம் வரை இலவசபொருட்கள் வழங்கப்படும் , நாட்டில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது எனவும், இந்தியாவில் உள்ள  கிராமங்களில்  வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டி  ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.