புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (16:03 IST)

புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு: அமைச்சர் நமசிவாயம் பேட்டி!

புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு என கல்வி அமைச்சர் நமசிவாயம் உறுதிபட தெரிவித்துள்ளார் 
தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா இல்லையா என இப்போதுவரை மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட்தேர்வு தேதியை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நீட் தேர்வுக்கான விலக்கை பெற்றே தீருவோம் என தமிழக அரசு கூறி வருகிறது. இதனால் நீட் தேர்வுக்கு தயாராவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் தமிழக மாணவர்கள் உள்ளனர் 
 
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டு என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதும் அந்தந்த மாநிலங்களில் மாணவர்கள் நீட்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே மாணவர்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்