1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:55 IST)

எம்.பி.பதவி ஏற்றார் மன்மோகன் சிங்:போட்டியின்றி தேர்வு

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங், இன்று ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி ஏற்றுகொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்த பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதத்தில் காலமான நிலையில், அந்த காலியான பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரை எதிர்த்து பாஜகவினர் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

ஆதலால் அந்த பதவிக்கு மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மன்மோகன் சிங் ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கடந்த 1991 முதல் 2019 வரை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். கடந்த ஜூன் மாதம் இவரது எம்.பி. பதவிகாலம் முடிவடைந்த நிலையில் தற்போது ராஜஸ்தானிலிருந்து எம்.பி.பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.