புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (08:58 IST)

”திறந்து வைத்த கட்டிடத்திலேயே சிறை வைப்பு”:ப சிதம்பரத்தின் பரிதாப நிலை

ப சிதம்பரம் அமைச்சராக இருந்த போது திறந்துவைத்த கட்டிடத்திலேயே தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

தற்போது சி.பி.ஐ. தலைமையகத்தின் புதிய கட்டிடத்தில் ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க, உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போதைய சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங், அந்த கட்டிடத்தில் உள்ள வசதிகளை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார்.  அந்த கட்டிடத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தான் தற்போது ப சிதம்பரம் தங்கவைக்கப்பட்டுள்ளார்.