தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு திடீர் போராட்டம்.. என்ன காரணம்?
- அண்ணாமலை சர்வாதிகாரி போல் நடந்து கொண்டார்- பாஜகவில் இருந்து விலகிய பாக்யராஜ் அறிக்கை
- மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் - நீதிமன்றம் உத்தரவு
- பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்க முடியும்: ஜெ.பி.நட்டா பேச்சு
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் விலகல்: பாஜகவில் இணைகிறாரா?
தேர்தல் நெருங்க நெருங்க ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே கட்சி தாவல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவருக்கு அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டு வருகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
