பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்க முடியும்: ஜெ.பி.நட்டா பேச்சு
தமிழ்நாட்டில் விரைவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்க முடியும் என்றும் தமிழக அமைந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10 கட்சி அலுவலகங்களை திறப்பதற்காக வருகை தந்த ஜெபி நட்டாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இந்த நிலையில் கட்சியினர் மத்தியில் பேசிய ஜெ.பி.நட்டா தமிழக பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும் மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடும்ப ஆட்சியே நடைபெற இருக்கிறது என்றும் காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றியுள்ளன என்றும் அவர் பேசினார்.
திரிபுரா மாநிலத்தை பாஜக தக்கவைக்க முடிந்தது என்றும் நாகலாந்தையும் வென்றுள்ளோம் என்றும் மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைத்து உள்ளோம் என்று கூறியஅவர் தமிழகத்திலும் விரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Edited by Mahendran