வாரத்தின் முதல் நாளே ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை படு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் குறைய தொடங்கியதால் பங்குச்சந்தையே ஆட்டம் கண்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 63 ஆயிரம் என்று இருந்த சென்செக்ஸ் தற்போது 59 ஆயிரம் என்ற நிலைக்கு சரிந்து விட்டது என்பது இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 315 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 17469 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க கதை மற்றும்
Edited by Siva