கொத்து கொத்தாக மடிந்த பென்குயின்கள்..! அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் வைரஸ்..!!
பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள எச்5என்1 பறவைக்காய்ச்சல், கொத்துக்கொத்தாக பறவையினங்களை கொன்று குவித்து வருகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மாதம் மட்டும் 532 பென்குயின்கள் மரணமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பறவை காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவிலிருந்து உலக அளவில் பரவியதாக கருதப்படும் பறவைக்காய்ச்சல், தற்போது பென்குயின்களை குறி வைத்து இருக்கிறது.