திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (14:32 IST)

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அன்று அரசு விடுமுறை என்றும் தனியார் நிறுவனங்களும் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது

இதனை அடுத்து அன்றைய தினம் திரையரங்குகள் காட்சிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ’

Edited by Siva