வேறோடு பிடுங்கிய மரத்தின் கீழ் பெரிய கிணறு.. கோவையில் ஒரு ஆச்சரியம்..!
கோவை அவிநாசி சாலையில் பாலம் கட்டும் பணிகளுக்காக அரசமரம் ஒன்று வேரோடு பிடுங்கிய நிலையில் அந்த மரத்தின் கீழ் ஒரு மிகப்பெரிய கிணறு இருந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒரு அரச மரத்தை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவதற்கான பணி நடைபெற்றது
இதனை அடுத்து நேற்று அரச மரத்தை வேரோடு பிடுங்க அதன் கீழே ஒரு மிகப்பெரிய கிணறு இருந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 65 ஆண்டுகாலம் இருந்த இந்த அரச மரத்தின் கீழ் கிணறு இருந்தது அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
அந்த கிணறு 40 அடி இருப்பதாகவும் அது மட்டும் இன்றி அதில் தண்ணீரும் அதிகமாக இருப்பதாகவும் குறுக்கே இரண்டு ராட்சத கம்பிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிணற்றில் ஓரம் வளர்ந்த அரசமரம் நாளடைவில் கிணற்றை மூடி இருக்கலாம் என்றும் கிணத்தில் தற்போதும் தண்ணீர் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளாகவும் அதை பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் வேரோடு பிடுங்கிய அரசு மரம் கோவை வ உ சி மைதானத்தில் மறு நடவு செய்ய அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran