1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (08:39 IST)

டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு முதல் பலி!

இந்தியாவில் டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு முதல் உயிர்பலி நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் வெவ்வேறு நாடுகளில் பல வகையில் உருமாறி வருகிறது. அவ்வாறு இந்தியாவில் உறுமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா வைரஸ் என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதன் மற்றுமொரு உருமாற்றமான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் இரண்டு மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் இந்த பாதிப்பு பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அவரோடு மற்ற நான்கு பேருக்கும் அந்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.