1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (07:07 IST)

சென்னை புறநகர் ரயிலில் ஆண்கள் பயணம் செய்ய கட்டுப்பாடு!

சென்னை புறநகர் ரயிலில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் அனைத்து பயணிகளும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சென்னை ரயில் பயணிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் ஆண் பயணிகளுக்கு மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் ஆண் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் ரயிலில் இன்று முதல் பெண் பயணிகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் அனைத்து நேரங்களிலும் பயணம் செய்யலாம் என்றும் ஆனால் ஆண் பயணிகள் நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ஆண் பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எனவே அனைத்து பயணிகளும் மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது