1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (23:17 IST)

தெலுங்கில் வில்லனாக மிரட்டவுள்ள ஜெயம் ரவி பட நடிகர் !

தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடிக்கவுள்ளார் அரவிந்த் சாமி.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தனர் அரவிந்த் சாமி.

இவரது நடிப்பில் மின்சாரக் கனவு, பம்பாய்,. ரோஜா, உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன்பின்னர் நீண்ட நாட்கள் கழித்து தனி ஒருவன் படத்தில் வந்து வில்லனாக நடித்தார்.

தற்போது குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் அவர் நடித்து வருகிறாஅர். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் நாகார்ஜூனா மகன் அகில் நடிக்கவுள்ள புதிய படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சயீரா நரசிம்மரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.