1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Fire accident in restaurant; 5 employees killed

மதுபான விடுதியில் தீ விபத்து: 5 பேர் பலி

பெங்களூர்
பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியே சோகமயமாக காணப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கைலசிபால்யா பகுதியில் காய்கறி சந்தை அருகே உள்ள கும்பாரா சங் என்ற கட்டிடத்தின் கீழ் தளத்தில் மதுபான விடுதி இயங்கி வந்தது. மதுபான விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள், அந்த கட்டிடத்திலேயே தங்குவது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விடுதிக்குள் தூங்கி கொண்டிருந்த பணியாளர்கள் 5 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாயினர். போலீஸார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சட்டசபையில் டிடிவி தினகரன் - முதல் கூட்டம் தொடங்கியது