தொடர்புடைய செய்திகள்
- அண்ணாமலை இன்று லண்டன் பயணம்.! வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும் என பேச்சு..!
- சட்டவிரோத சேவல் சண்டை எட்டு பேரை கைது செய்து சொந்த ஜாமினில் விட்ட போலீசார்!
- அனைத்து விதமான ஃபென்சிங் எனும் வாள் வீச்சு சண்டை போட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக கோவையை சேர்ந்த சரவணன் தேர்வு!
- பயங்கர துப்பாக்கி சண்டை.! ராணுவ தளபதி வீரமரணம்.! 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை..!!
- ஒலிம்பிக்ஸா இது..? அடி தாங்க முடியாமல் வெளியேறிய பெண் பாக்ஸர்! அடித்த நபர் ஆணா? வெடித்த சர்ச்சை!
மட்டன் பீஸ் இல்லை.. திருமண வீட்டில் நடந்த சண்டையால் 8 பேர் படுகாயம்..!
திருமண விருந்தில் மட்டன் பீஸ் இல்லை என்று கூறி வாக்குவாதம் செய்த நிலையில் அது கைகலப்பாக மாறி நடந்த சண்டையால் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நிஜாமாபாத் பகுதியில் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமண விருந்தில் மட்டன் கறி சமைக்கப்பட்டது. இந்த நிலையில் மட்டன் துண்டுகள் இல்லை என மணமகனின் உறவினர்கள் தகராறு செய்த நிலையில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு அது சண்டையாக மாறியது.
இரு தரப்பிற்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் சமையல் கரண்டிகள், கற்கள், கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த சம்பவத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருமண வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
