செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:59 IST)

சட்டவிரோத சேவல் சண்டை எட்டு பேரை கைது செய்து சொந்த ஜாமினில் விட்ட போலீசார்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி சிவன் கோவில் பின்புறம் கடந்த 17ஆம் தேதி  சில லட்சங்கள் புரளும் கோழி சண்டை நடைபெற்றது 
 
இந்த கோழி சண்டை சூதாட்டத்திற்கு சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோழிகளை சண்டை விட்டு ஆதாயம் பெற்று வருகின்றனர்.
 
மேலும் கோழி சண்டையின் மூலம் சுமார் சில லட்ச ரூபாய் வரை இந்த கோழி சண்டை நடைபெற்று பெற்றது.
 
இந்த நிலையில் சேவல் சண்டையில் கலந்து கொண்ட சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார் அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வேகமாக பரவியது 
 
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் அனேரி  பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பூர்ணா, விக்னேஷ்,ஜெகதீசன் யாகு,முத்தமிழ்,நதிம்,முகசீ உள்ளிட்ட எட்டு பேரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்தனர் 
 
கைது செய்த பின்பு கிராமிய போலீசார் சொந்த ஜாமினில் விடுவித்தனர்