சபரிமலை விவகாரம்: வெட்டி விளம்பரம் செய்த பாத்திமா ஜமாஅத்தில் இருந்து நீக்கம்
வெட்டி விளம்பரத்திற்காக சபரிமலைக்குள் நுழைய முயன்ற ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 19 ஆம் தேதி வெட்டி பந்தாவிற்காகவும், வீண் விளம்பரத்திற்காகவும் எந்த விரதமும் மேற்கொள்ளாமல் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்ற பெண் கோவிலுக்குள் நுழைய முற்பட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் திரும்ப அனுப்பப்பட்டார்.
இதனையடுத்து பாத்திமா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கைகளை சீர் குலைக்கும் விதமாக அவர் நடந்துகொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மற்ற மதத்தின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை காயப்படுத்திய பாத்திமா , இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கும் கேரள ஜமாஅத்துக்கும் இனி எந்தவொரு தொடர்பும் கிடையாது என தெரிவித்துள்ளது.