செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:23 IST)

சபரிமலை விவகாரம்: கேரள வாலிபரின் வேலைக்கு வேட்டுவைத்த சவுதி நிறுவனம்

சபரிமலை விவகாரம் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த கேரள இளைஞர் சவுதியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
 
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இந்நிலையில் சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் கேரள இளைஞரான தீபக் பவித்திரம் சமூக வலைதளத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்டிடுக்கிறார். இதனால் தீபக்கை வேலையிலிருந்து நீக்குவதாக அவர் வேலை செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதேபோல் கேரள வெள்ளத்தின் போதும், அவதூறாக கருத்து பதிவிட்ட கேரள இளைஞர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.