சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்கள்: திருப்பி அனுப்ப அதிராடி உத்தரவு
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரியும் கவிதா என்பவர் இன்று சபரிமலைக்கு சென்றுள்ளார். அவருடன் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலைக்கு சென்றுள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தை கவிதா, ரஹானா பாத்திமா ஆகிய இருவரும் நெருங்கிவிட்ட நிலையில் பக்தர்கள் அவர்கள் இருவரையும் தடுக்கும் வகையில் சன்னிதானம் முன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய கவிதா மற்றும் ரஹானா பாத்திமாவை திருப்பி அனுப்ப கேரள அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.