1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (08:01 IST)

திமுகவை அடுத்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி

திமுகவை அடுத்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி
நேற்று முன் தினம் இரவு திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இரவோடு இரவாக அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால் திமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அமமுகவின் செய்தி தொடர்பாளர் சிவசங்கரியை அந்த பதவியில் இருந்து நீக்கி அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுகவை அடுத்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி
டி.கே.எஸ் இளங்கோவனை போலவே சிவசங்கரி நீக்கப்பட்டதற்கான காரணத்தை டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சி விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாகவும் அவர் நீக்கப்பட்டதாக டிடிவி தினகரனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.