ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (09:27 IST)

மனைவி மீது கோபம் - 3 மகன்களை ஆற்றில் வீசி கொலை செய்த சைக்கோ தந்தை

மனைவி மீதுள்ள கோபத்தால் குடிகார தந்தை ஒருவன் தனது 3 மகன்களை ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டே போவதற்கு முக்கியக் காரணம் குடி தான். அப்படி தான் இந்த குடியின் காரணமாக ஆந்திராவில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் பால கங்கனபல்லியை சேர்ந்த லாரி ஓட்டுநரான வெங்கடேஷ், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அமராவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் (5), புனித் (4), ராகுல் (2) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். 
 
வெங்கடேஷுக்கு பயங்கர குடிப்பழக்கம் இருந்துள்ளது. வெங்கடேஷிடம் அவரது மனைவி குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு எவ்வளவு தான் கூறியபோதும், இதனை சற்றும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் வெங்கடேஷ். இதனால் அமராவதி கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.
 
இந்நிலையில் வெங்டேஷ், அமராவதியின் வீட்டிற்கு சென்று, அவரை சமாதானப்படுத்தி மனைவி மற்றும் 3 மகன்களையும் பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
 
ஒரு பாலம் அருகே சென்ற போது மீண்டும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த கொடூரன் வெங்கடேஷ் பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல், 3 மகன்களையும் கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தின் மேலிருந்து ஆற்றில் வீசினான். இதனை சற்றும் எதிர்பாராத அமராவதி செய்வதறியாது கதறி துடித்தார். 
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், முயற்சி செய்தும் குழந்தைகளை சடலமாக தான் மீட்க முடிந்தது. 
 
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சைக்கோ தந்தை வெங்கடேஷை கைது செய்தனர்.