திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:51 IST)

தந்தையின் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்

திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் ஒருவர் ஓட ஓட நடுரோட்டில் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கள்ளக்காதல விவகாரத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. பெரும்பாலும் கணவன் மனைவியை கொலை செய்வதும், மனைவி கணவனை கொலை செய்வதும்தான் அரங்கேறி வந்தது. இந்நிலையில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஸ்ரீவித்யா நகர் பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ரங்கநாயகி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
நாளடைவில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த துரையின் மகன் அருண் தனது தந்தையிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் துரை மறுத்துள்ளார். இதையடுத்து அருண் ரங்கநாயகியையும் எச்சரித்துள்ளார். 
 
ஆனால் இவர்களது கள்ளக்காதல் உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று சாலையில் அருணுக்கும், ரங்கநாயகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரங்கநாயகியை குத்த முயன்றார்.
 
ரங்கநாயகி கத்தியை தட்டிவிட்டு ஓடியுள்ளார். அருண் அதோடு விடாமல் ரங்கநாயகியை துரத்தி அவரது கையில் கத்தியால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் அருணை பிடித்து ரங்கநாயகியை காப்பாற்றினர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.