1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:42 IST)

தற்கொலை முடிவில் இருந்தேன் : நடிகை கஸ்தூரி அதிர்ச்சி டிவிட்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

 
உலகம் முழுவதும் நேற்று நட்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனையயடுத்து  வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் நட்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில்,நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நிறைய இழந்து போராட்டிக்கொண்டும், சண்டை போட்டு கொண்டிருந்த சமயத்தில் என் உறவினர்கள் என்னை ஏமாற்றினர். எனக்கு பலரும் துரோகம் செய்தனர். வாழ்க்கை என்னை சோதனை செய்தது. மரணம் என்னை அழைத்தது. அப்போது என் நண்பர்கள் என் பக்கம் நின்றனர். எனக்காக அவர்கள் எதையும் என்னால் மறக்க முடியாது” என தன்னுடைய நண்பர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவை இட்டிருந்தார்.
 
மேலும், அடுத்த பதிவில் “இரண்டு வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கை குப்பையாக இருந்தது. மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணனும் தோன்றியது. என்னை அதிலிருந்து காப்பாற்றியது நெட்டிசன்களாகிய நீங்கள்தான். டிவிட்டர் வாதிகளுக்கு நன்றி. இன்று நான்  இருப்பதில் கீச்சாளிகள் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு!  இது உண்மை !” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
அதாவது தன்னுடைய வாழ்க்கை மாறியதற்கு தனது நண்பர்களும், நெட்டிசன்களுமே காரணம் எனக்கூறி நட்பு தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.