பிரபல வீராங்கனை தற்கொலை ...
பிரபல துக்காக்கி சுடுதல் வீராங்கனை இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சிங். இவருக்கு வயது 17 ஆகும். தேசிய துப்பாக்கி சுடுதல், உலக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டார்.
கடந்த 9 ஆம் தேதி பர்த்கொட்டில் உள்ள தனது இல்லத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.