1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (21:10 IST)

’’பெற்றோர் பெயருக்குப் பதிலாக கவர்ச்சி நடிகையின் பெயர்’’ மாணவன் அட்டூழியம்!

’’பெற்றோர் பெயருக்குப் பதிலாக கவர்ச்சி நடிகையின் பெயர்’’ மாணவன் அட்டூழியம்!
பீகார் மாநிலத்தில் உள்ள முஷாஃபர்பூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் குந்தன். இவர் பீகார் மாநிலத்திலுள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் பிஏ  படித்து வருகிறார்.

இவருக்குக் கல்லூரியில் வழங்கப்பட்ட தேர்வு அனுமதி அட்டையில் தன் பெற்றோரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில், பிரபல நடிகர் இம்ரான் ஹாஸ்மி, மற்றும்  கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆகிய இருவரின் பெயர்களை எழுதியுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுசம்பந்தமாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பல்கலைகழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் இம்ரான் ஹாஸ்மி டுவிட் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில மாதங்களுக்கு முன் கல்லூரியில் தரவரிசைப்பட்டியலில் சன்னிலியோனின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.