வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (15:48 IST)

உணவைத் தொட்டதற்கான தலித் இளைஞர்… அடித்துக் கொலை !

மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதற்கான அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரம் பெற்று 60 வது ஆண்டுகளுக்கு  மேல் ஆகினாலும்கூட இந்தியாவில் இன்னும்  சாதிக் கொடுமைகள் இருக்கவே செய்கிறது.

இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உயர்சாதி இளைஞர்கள் தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்தனர்.  தற்போது இக்கொலைக்குக் காரணமானவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.