திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:50 IST)

’’ரூ.100 கொடுத்தால் போராட்டத்துக்கு வரும் மூதாட்டி’’ முன்னணி நடிகைக்கு நோட்டீஸ்!!

ஏற்கனவே பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கன ரணாவத் விவசாயிகளின் போராட்டம் குறித்து பதிவிட்ட டுவீட்டிகு நீதிமன்றம் கண்டம் தெரிவிதிருந்தது.

இந்நிலையில், தற்போது 9 வது நாளாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபலமான பானு என்ற மூதாட்டிக்கு  ரூ. 100 கொடுத்து இப்போராட்டத்திற்கு வரவழைத்துள்ளனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.

இதற்குத் தனது கண்டனத்தை தெரிவித்த பில்கிஸ் பானு என்ற மூதாட்டி  தான் நாளொன்று ரூ.500 கொடுத்து ஊழியர்களை வைத்துள்ளதாக நடிகை கங்கனாவுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் , மூதாட்டி பற்றியும் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துப் பதிவிட்டிருந்ததற்காக கங்கணா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று சீக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து ஒருவார காலத்திற்குள் கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டுமென சீக்கிய குருத்வாரா நிர்வாக அமைப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் தனது டுவீட்டை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது