செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:42 IST)

சர்ச்சை பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ; ஐடியை தூக்கிய பேஸ்புக்!

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஆளும் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் கணக்கையே முடக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக இந்தியாவில் செயல்படுவதாகவும், பாஜகவிற்கு எதிரான பதிவுகளை முடக்குவதாகவும் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோஷமஹால் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ டைகர் ராஜா சிங் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்ததால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் முன்னதாக எதிர்கட்சிகள் பேஸ்புக் ஒரு சார்பாக செயல்படுவதாக கூறிய குற்றச்சாட்டையும் பேஸ்புக் மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டைகர் ராஜா சிங் தனக்கு பேஸ்புக்கில் கணக்கே இல்லை என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.