செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (11:35 IST)

அட சீக்கிரம் சிக்னல் போடுங்கப்பா! ரூல்ஸை ஃபாலோ பண்ணும் நாய்!

அன்றாடம் போக்குவரத்து விதிகளை மனிதர்களே பின்பற்றாத நிலையில் நாய் ஒன்று விதிகளை பின்பற்றி சாலையை கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாள்தோறும் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் பல்வேறு வாகனங்கள் சென்று வந்தாலும் அவ்வபோது பலர் விதிகளை மீறுவதால் ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணியவும், குறைந்த வேகத்தில் செல்லவும் போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தினாலும் கூட யாரும் கேட்பதில்லை.

இந்நிலையில் யாரும் சொல்லாமலே போக்குவரத்து விதிகளை பின்பற்றி நாய் ஒன்று சாலையை கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வேகமாக வாகனங்கள் செல்லும் சாலை ஒன்றின் ஓரத்தில் நிற்கும் நாய் ஒன்று அங்கிருக்கும் போக்குவரத்து காவலர் வாகனங்களை நிறுத்தும் வரை அவருக்கு அருகிலேயே நிற்கிறது. வாகனங்களை நிறுத்தி அவர் சாலைக்கு நடுவே செல்லவும் அவருடன் சென்று சாலையை கடக்கிறது. சாலை விதிகளை பின்பற்றும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.