செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (07:17 IST)

முன்னாள் முதலமைச்சருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது இந்த ஆண்டு பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டு வரும் நிலையில், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூர் அவர்களின் மறைவுக்கு பின் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக போராடியவர் கர்பூரி தாகூர் என்றும், பீகாரில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்தவர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva