1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (14:21 IST)

மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!!!

Bomb  Theraten
டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
 
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடந்த 1-ம் தேதி சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன் காரணமாக, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதி ஏற்பட்டது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள டெல்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அது போலியாக விடுக்கப்பட்ட மிரட்டல் என்பது தெரியவந்தது.

 
வட மாநிலங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.