புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (15:48 IST)

புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது அமலாகும்? மத்திய அரசு அறிவிப்பு

parliment
புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு இன்று அசாரணை வெளியிட்டு அறிவித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில்  பாஜக அரசால் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு இன்று அசாரணை வெளியிட்டு அறிவித்துள்ளது.
 
மத்திய பாஜக அரசு இந்திய தண்டனை சட்டத்திற்குப் ( ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா எனவும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் (சிஆர்பிசி) பதிலாக - பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்குப் பதிலாக -பாரதிய சாக்ஷ்யா அதிநியம் என   மாற்றம் செய்து ஆளும் மத்திய பாஜக அரசால் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.