செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (21:35 IST)

சமோசாவுக்காக இளைஞர் தீக்குளித்தால் பரபரப்பு

உலகில் நாள்தோறும் எத்தனையோ விஷயங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆச்சர்யமளிக்கக் கூடிய விஷயங்களும் இடம்பெறும், இப்படிச் செய்துவிட்டார்களா என கலங்க வைக்கும் விசயங்களும் தோன்றும்.

அந்தவகையில், மத்திய பிரதேசத்தில் சமோசாவுக்காக ஒரு இளைஞர் தீக்குளித்து பலியாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனுப்பூர் நகரில் ஒரு சமோசா கடை உள்ளது. இங்கு ஒரு சமோஷா இன்று ரூ.20 க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் ரூ.15க்கு விற்கப்பட்ட நிலையில் இந்தக் கடைக்கு தினமும் வாடிக்கையாளரான இளைஞர் இந்த விலை  உயர்வு குறித்துக் கேள்வி எழுபியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செஉது விசாரித்து வருகின்றனர்.