புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (10:05 IST)

விலை உயர்ந்த சமோசா; கடுப்பான சமோசா பிரியர் தீக்குளிப்பு! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் சமோசா அதிக விலைக்கு விற்றதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் நகரை சேர்ந்தவர் பஜ்ரு ஜெய்ஸ்வால். சமீபத்தில் இவர் தனது இரு நண்பர்களுடன் அருகில் உள்ள ஒரு கடையில் சமோசா சாப்பிட்டுள்ளார். பணம் கொடுத்தபோது சமோசா விலை உயர்ந்து விட்டதாக கூறிய கடைக்காரர் கஞ்சன் சாகு 2 சமோசா ரூ.15க்கு பதிலாக ரூ.20 ஆக விலை சொல்லியுள்ளார்.

இதுகுறித்து கடைக்காரருக்கும், பஜ்ருவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் பஜ்ருவை விசாரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் மீண்டும் கடைக்காரரிடம் சென்று வாக்குவாதம் செய்த பஜ்ரு எதிர்பாராத நேரத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திக் கொண்டுள்ளார்.

உடனடியாக தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சமோசாவால் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.