1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. evm machine fired in madhya pradesh

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம்.. மீண்டும் தேர்தல் என அறிவிப்பு..!

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்களை பேருந்தில் கொண்டு சென்ற போது பேருந்து தீ விபத்தில் சிக்கியதால் அதிலிருந்து நான்கு வாக்குசாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் இருந்து நாசம் ஆகிவிட்டதாக கூறப்படுவதை அடுத்து மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டபோது திடீரென அந்த பேருந்து தீ விபத்தில் சிக்கியது

இந்த தீ விபத்தில் ஓட்டுநர் உள்பட யாருக்கும் காயம் இல்லை என்றாலும் நான்கு வாக்குசாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசமாகிவிட்டதாகவும் இதனை அடுத்து சம்பந்தப்பட்ட தொகுதிக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த தாகவும் இதனை அடுத்து உடனடியாக தேர்தல் அலுவலர்கள் காவலர்கள் மற்றும் ஓட்டுனர் கீழே இறங்கியதால் உயிர் சேதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து பேருந்தில் உள்ள தீயை அணைத்தாலும் நான்கு வாக்கு சாவடிகளின் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்.? ராகுல் காந்திக்கு பிரதமர் கேள்வி..!!