1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்

17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது போக்ஸோ என்ற சட்டம் பாயும் என சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில் ஈரோடு அருகே ஏற்கனவே திருமணமான இளைஞர் ஒருவர் 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கடந்த 10 மாதங்களுக்கு முன் ஈரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த்ராஜ் என்பவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான ஒருசில மாதத்தில் மனைவியை பிரிந்துவிட்ட ஆனந்த்ராஜ், பின்னர் தனது வீடு அருகே உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி அவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார்.
 
இந்த நிலையில் மைனர் பெண்ணுடன் ஆந்திராவில் ஆனந்த்ராஜ் குடியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மைனர் பெண்ணையும் மீட்டனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த்ராஜூக்கு உதவிய முருகன் என்பவரையும் கைது செய்தனர்.