செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (07:43 IST)

திட்டமிட்டே போலி கருத்துக்கணிப்புகள்.. பங்குச்சந்தை நிபுணர்கள் குற்றச்சாட்டு..!

நாடாளுமன்ற தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைந்த நிலையில் அன்றைய மாலை கருத்துக்கணிப்புகள் வெளியாகின என்பதும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்யாகிய நிலையில்   திங்கட்கிழமை பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது என்பதும் தெரிந்தது

ஆனால் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய் என்பது தெரிய வந்தது. அதனை அடுத்து அன்றைய தினம் பங்குச்சந்தை படுவேகமாக வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறும் போது வேண்டுமென்றே திட்டமிட்டு பாஜக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று பொய்யான கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டுள்ளது என்றும் பங்குச்சந்தையில் ஊழல் செய்யவே இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு வெளியான தினத்தில் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்ததால் 31 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் நேற்று ஓரளவுக்கு பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது

Edited by Siva