வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூன் 2024 (08:21 IST)

40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி.. ஆனாலும் 6 தொகுதிகளில் 3வது இடம்..!

seeman
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடி உள்ளது என்பதும் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்றாலும் அந்த கூட்டணி 10 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் பெற்று தொண்டர்களுக்கு ஆறுதலாளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என்பதும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்று கூட்டணி போக நான்காவது சீமானின் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. ஆனாலும் சிவகங்கை தொகுதியில் அதிகபட்சமாக 1.63 வாக்குகள் பெற்றுள்ளது என்பதும் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் பாஜகவை அடுத்து மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளதும் ஆச்சரியமான ஒரு வளர்ச்சி என்ற கருதப்படுகிறது. இருப்பினும் இந்த வளர்ச்சி சீட்டாக மாறாமல் இருக்கும் நிலையில் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு தான் ஏற்பட்டு வருகிறது

Edited by Siva