செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூன் 2024 (11:38 IST)

டெல்லியில் இன்று அடுத்தடுத்து நடக்கும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிகளின் கூட்டம்: அவசர ஆலோசனை..!

Modi Rahul
டெல்லியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களிலும் இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் வென்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க இரு கூட்டணிகளும்  தீவிர முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். பாஜக தனி பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது என்பதும் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் இன்று மாலை டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன் டெல்லி கிளம்பி உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சியை தலைவர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இதில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகள் ஆட்சி அமைக்க கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva