நேற்று 4000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. இன்றைய நிலை என்ன?
நேற்று 4000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. இன்றைய நிலை என்ன?
நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் எந்த கூட்டணிக்கும் எந்த கட்சிக்கும் 60 பெரும்பான்மை கிடைக்காததால் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்பதும் வரலாற்றிலேயே முதல் முறையாக 4000 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நான்காயிரம் புள்ளிகள் சரிந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 557 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 601 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை யான நிப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 22007 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி அதன் பின்னர் மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைந்த உடன் தான் மீண்டும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதுவரை பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் நேற்று மிக மோசமாக சரிந்த பங்குச்சந்தையின் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.