விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு! – தேர்தல் கட்டுப்பாட்டுக்கு தயாராகும் மாநிலங்கள்!

Prasanth Karthick| Last Modified புதன், 24 பிப்ரவரி 2021 (12:15 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இறுதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் மாநிலங்களில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் திட்டப்பணிகளை மாநில அரசுகள் துரிதமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :