வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:35 IST)

மறைமுகமாக உயர்த்தப்படும் ரயில் கட்டணம்!? – எஸ்ஆர்எம்யூ குற்றச்சாட்டு!

இந்தியா முழுவதும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக எஸ்ஆர்எம்யூ குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பயணிகள், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என பல்வேறு வகையான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பயணிப்போர் அதிகரிப்பதால் நெருக்கடியை சமாளிக்க பண்டிகை கால சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பண்டிகை கால சிறப்பு ரயில்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டம் தெரிவித்துள்ள சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் ‘சிறப்பு ரயில் கட்டணம் என்ற பெயரில் அனைத்து ரயில்களுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இது மக்களை வஞ்சிக்கும் செயல்” என குற்றம் சாட்டியுள்ளது.