செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:24 IST)

சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன்! – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

டூல் கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டூல் கிட் தயாரித்ததாக பெங்களூரை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திஷா ரவி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பதிவிட்ட நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க டெல்லி மகளிர் ஆணையம், காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடந்த திஷா ரவிக்கு ஜாமீன் வழங்குவது மீதான விசாரணையில் அவரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.