1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:21 IST)

முதல்முறையாக விஜய் படத்தில் இணையும் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தில் முதல் முறையாக தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் அன்பறிவ் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள திரைப்படம் ’தளபதி 65’ இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்றும் பாலிவுட் நடிகர்களான நவாசுதீன் சித்திக், வித்யூத் ஜம்மால் ஆகியோர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்றும் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் பணிபுரிய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தளபதியுடன் முதல்முறையாக அன்பறிவ் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அன்பறிவ் ’கேஜிஎப்’ என்ற படத்திற்காக தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே