திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (16:13 IST)

கர்நாடக தேர்தலுக்கும் காவிரி விவகாரத்திற்கும் என்ன சம்மந்தம்?

கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என கேள்வி எழுப்பி மத்திய அரசை திணரடித்துள்ளது தேர்தல் ஆணையம். 
 
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளை மறுநாள் நிறைவடைகிறது. 
 
ஆனால், மேலாண்மை வரியம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

 
மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரவில் நடைபெறவுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்குவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தயக்கம் காட்டுமோ என தேர்தல் ஆணையம் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிகள் காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய ஆரசால் தேர்தலை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது.