1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (14:38 IST)

மோடியின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அய்யாக்கண்ணு பேட்டி

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலான்மை வாரியம் அமைக்காவிட்டால் பாரத பிரதமர் நரேந்திரமோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக கரூரில் தேசிய நதிகள் நீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.

 
நச்சு இல்லா உணவுமூலம் மனித குலத்தை மீட்கவும் , மரபணுமாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடைசெய்ய கோரி 1-03-18 முதல் 100 நாட்கள், குமரி முதல் கோட்டைவரை விவசாயிகள் விழிப்புணர்வு நாடைபயணம், அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கரூர் மாவட்டத்திற்க்கு வருகை புரிந்த விவசாய சங்கத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறுகையில், தேர்தலுக்கும், நீதிமன்றத்தீர்ப்பிற்கும் எந்த வித சம்பந்தமும், இல்லை, ஆகையால் கர்நாடாகா மாநிலத்தின் தேர்தலுக்காக, உச்சநீதிமன்ற  தீர்ப்பை உதாசினப்படுத்த கூடாது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும். இதுவரை 10 மாவட்டங்களில் 5 லட்சம் பேர்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 25 லட்சம் மக்களை சந்திக்க உள்ளோம். 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். அதே போல கர்நாடகா அரசு மீது 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி விவசாயிகளை வஞ்சித்து விட்டார். நதி நீர் இணைப்பு செய்வதில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஏமாற்று வருகிறது என அவர் கருத்து தெரிவித்தார்.
-சி.ஆனந்தகுமார்