செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (12:09 IST)

கர்நாடகா தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் தாமதம் ஆகுமா? தலைவர்கள் கருத்து

இன்று காலை 11 மணிக்கு கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.
டி.கே.எஸ் இளங்கோவன் (திமுக): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தேர்தல் விதிமுறைகளுக்குள் கட்டுப்படாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தேர்தலை காரணம் காட்டி, மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்த வாய்ப்பு இல்லை. தேர்தல் விதிகள் அமலில் இருந்தாலும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது



அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்: கர்நாடகா தேர்தலால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படாது என நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: மத்திய அரசுக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ, அதன் அடிப்படையில் தான் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்து அழுத்தம் தர வேண்டும்